×

வேட்புமனு தாக்கல் செய்ய வராததால் வெறிச்சோடி கிடந்த பிடிஓ அலுவலகம்

காரிமங்கலம், டிச.11: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, 2வது நாளாக வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வராததால், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி பிடிஓ அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலையொட்டி, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு 5 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் 2வது நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. ஆனால், ஒரு சிலர் மட்டும் விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். வேட்பாளர்கள் வருகைக்காக, அதிகாரிகள் நீண்ட ேநரம் காத்திருந்தனர்.பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் ஒன்றியங்களில் ஒன்றிய கவுன்சிலர்  ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இந்நிலையில் 2வது நாளான நேற்று, வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. கடத்தூர் ஒன்றியத்தில் 10 பேர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் 10 என மொத்தம் 20பேர் மட்டுமே, வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  கடத்தூர் ஒன்றியத்தில் 25 தலைவர் பதவிகளுக்கும், 13கவுன்சிலர் பதிவுகளுக்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதே போல், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களில் உள்ள 19 ஊராட்சி மன்ற தலைவர் பதிவுகளுக்கும், 14 ஒன்றிய கவுன்சிலர் பதிவுகளுக்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : PDO ,office ,
× RELATED பள்ளியில் தேங்கி கிடக்கும் மழைநீர்...