×

அரூர் பகுதியில் தேங்கிய கழிவுநீர் அகற்றம்

அரூர், டிச.11:அரூர் ேபரூராட்சி 7வது வார்டில் தேங்கிய கழிவுநீர் அகற்றும் பணி நடந்தது.அரூர் பேரூராட்சி 7வது வார்டுக்குட்பட்ட மேட்டுப்பட்டி, பாரதியார் நகரில், சுமார் 1200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், சாக்கடை கால்வாய், சாலை போன்ற அடிப்படை வசதிகளின்றி இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். சாக்கடை கால்வாய் இல்லாததால், வீடுகளில் சேகரமாகும் கழிவுநீர் வெளியேற வழியின்றி, சாலையோரத்தில் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதில் பழைய வாகனங்களின் டயர், பிளாஸ்டிக் பொருட்கள் நீண்ட நாட்களாக மிதப்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டு வந்தது. இது குறித்து மக்கள் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து தினகரன் நாளிதழில், ேநற்று முன்தினம் 9ம் தேதி, படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நேற்று பேரூராட்சி ஊழியர்கள் குட்டை போல் தேங்கி இருந்த கழிவுநீரை, இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘தற்போது நடைபெறும் துப்புரவு பணியானது, தற்காலிகமாக மட்டுமே பயனளிக்கும். எனவே இதற்கு நிரந்தர தீர்வாக சாக்கடை கால்வாய் கட்ட ேவண்டும்,’ என்றனர்.

Tags : Aroor ,
× RELATED ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை