×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த பயிற்சி

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.11: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலாபுரம் கிராமத்தில், வேளாண்  பயிர்களில் பூச்சி மற்றும் நோய்கள் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலாபுரம் கிராமத்தில், அட்மா திட்டத்தின் மூலம், வேளாண்  பயிர்களில் பூச்சி மற்றும் நோய்கள் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி நடந்தது. வட்டார வேளாண்மை அலுவலர் அருணன் தலைமை வகித்தார். அட்மா திட்டத்தின் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரவி வரவேற்றார். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம், வேளாண் பயிர்களான நெல், பருத்தி, மக்காசோளம், நிலக்கடலை மற்றும் பயறு வகைகள் போன்ற பயிர்களை தாக்கும் முக்கியமான பூச்சி மற்றும் நோய்களை பற்றியும், அவற்றை  கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் திருநாவுக்கரசு, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் நன்மைகள் பற்றி விரிவாக கூறி, இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்களான சண்முகம், தமிழரசி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Papyrepatti ,
× RELATED பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை