மனித உரிமைகள் தின கருத்தரங்கு

தர்மபுரி, டிச.11: தர்மபுரி அரசு சட்டக்கல்லூரியில், மனித உரிமைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.  தர்மபுரி அரசு சட்டக்கல்லூரியில், மனித உரிமைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லூரியின் முதல்வர் சிவதாஸ் தலைமை வகித்தார். சிறார் நீதி குழுமம் உறுப்பினர் வக்கீல் ரவி, தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குனர்கள் கமலக்கண்ணன், வரலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மண்டல மனித உரிமை ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா கலந்து கொண்டு பேசுகையில், 1948 டிசம்பர் 10ம் தேதி ஒன்று கூடிய, ஐக்கிய நாடுகளின் பொது அவையால் மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதை பெருமைப்படுத்தும் வகையில், இந்நாள் மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும், தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, 1950 முதல் டிசம்பர் 10ம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இப்பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும். எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப்பிரகடனம் வலியுறுத்துகிறது. இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும், வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது என்றார்.

Tags : Human Rights Day Seminar ,
× RELATED இணையதளம் வழியாக பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு குறித்து பயிற்சி