குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டம்

திருப்பூர், டிச. 11: திருப்பூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 41 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.  குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று திருப்பூர் மாநகராட்சி முன்பு குடியுரிமை திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அபுதாகிர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஹாரிஸ் பாபு, மாநில செயற்குழு உறுப்பினர் பசீர் அகமது உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேரை தெற்கு போலீசார் கைது செய்து, சிறிது நேரத்தில் விடுவித்தனர்.

Tags :
× RELATED ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பூ மார்க்கெட் இடிக்கும் பணி துவங்கியது