×

பசுமையான தேயிலை தோட்டம்

குன்னூர்,டிச.11: நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டு தேயிலை செடிகள் கருகும் நிலையில் தற்போது அதிக மழை பொழிவு காரணமாக தேயிலை தோட்டங்கள் பசுமை நிறைந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்படும் இதனால் பல ஏக்கர் பரப்பளவில் தேயிலை செடிகள் கருகி வீணாகிவிடும். குறிப்பாக காட்டேரிஅணை, சேலாஸ், கரும்பாலம், பந்துமை உள்ளிட்ட பல இடங்களில் தேயிலை செடிகள் கருகி காணப்படும் ஆனால் தற்போது இந்தாண்டு பெய்த தொடர் மழையால் இது நாள்வரை பனிப்பொழிவு ஏற்படாமல் உள்ளது. தொடர் மழை காரணமாக அனைத்து இடங்களிலும் பசுந்தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தேயிலை கொள்முதலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் தற்போது பச்சை பசேல் என்று காட்சியளிக்கிறது. இதனால் தேயிலை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திள்ளது.

Tags : Green Tea Garden ,
× RELATED காவல்துறை சார்பில் பழங்குடியின கிராமங்களில் குறை தீர்க்கும் கூட்டம்