×

உள்ளாட்சி தேர்தல் இரு நாட்களில் 14 பேர் வேட்புமனு தாக்கல்

ஊட்டி, டிச. 11: உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 6 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 59 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 35 ஊராட்சி தலைவர்கள், 393 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கிறது. நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது. இதில், முதல் நாளான நேற்று முன்தினம் 5 இடங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேபோல், ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 8பேர் தாக்கல் செய்தனர். வேட்புமனுதாக்கல் இன்று முதல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED திருப்புவனம் அருகே 2 பைக்குகள்...