×

இரவு நேரத்தில் சிகிச்சை அளிக்க பந்தலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இருப்பதில்லை

பந்தலூர், டிச. 11 :   பந்தலூர் அரசு மருத்துவமனை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி இருபது வருடங்களுக்கு மேல் ஆகிறது. பந்தலூர் தாலுகா பகுதியில் ஏழை, எளிய மக்கள் மற்றும் தேயிலைத்தோட்டத்தில் பணிபுரியும் சாதாரண மக்கள் பெரிதும் இம்மருத்துவமனையை நம்பியுள்ளனர். இந்த மருத்துவமனையில் செவிலியர்கள், உதவியாளர்கள்,  பணியாளர்கள் குடியிருப்புகள், லேப் டெக்னீசன்கள், எக்ஸ்ரே, உள்நோயாளிகளுக்கு உணவு சமைக்க சமையல் அறை, சமையலர்கள் உள்ளிட்ட  பல்வேறு  வசதிகள் இல்லாமல் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.    தினந்தோறும்  சாதாரண சிகிச்சை மட்டும் செய்து வருகின்றனர் தற்போது ஐந்து மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.  இரவு நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் மூலமாகவும் ஆட்டோ, ஜீப் ஆகியவற்றில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தனர்.

ஆனால், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வரும் அவசர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க  மருத்துவர்கள் இருப்பதில்லை என நோயாளிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள்  பாதிக்கப்பட்டுகின்றனர்.   இந்நிலை தொடர்ந்தால், மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய நோயாளிகளுக்கு  முதலுதவி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதரத்துறையினர் உரிய ஆய்வு செய்து 24 மணி நேரமும் மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : doctors ,Bandalur State Hospital ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை