×

கலெக்டர் ஊரில் இல்லாத போது ஜேசிபி பயன்பாடு மும்முரம்

ஊட்டி, டிச. 11: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கை அழகை பாதுகாத்திடவும், அதேசமயம் நிலச்சரிவுகள் ஏற்படாமல் இருக்க ஜேசிபி., ஹிட்டாச்சி போன்ற வாகனங்களை கொண்டு மலைகளை கரைப்பது, சாலை அமைப்பது மற்றும் மட்டம் அடிப்பது போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   நீலகிரி மாவட்ட கலெக்டராக இன்னசென்ட் திவ்யா பொறுப்பேற்றவுடன், ஆழ்துளை கிணறு அமைக்க வழங்கப்பட்டு வந்த அனுமதியை ரத்து செய்தார். மேலும், ஜேசிபி., மற்றும் ஹிட்டாச்சி போன்ற வாகனங்களும் அரசு தேவைகள் மற்றும் முறையான அனுமதி பெற்ற பின்னரே இயக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதனால், கடந்த இரு ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் வீடுகள் கட்ட கூட மட்டம் வெட்டுவதற்கு ஜேசிபி., அனுமதி கிடைக்காமல் பலரும் காத்திருக்கின்றனர்.   ஆனால், அரசியல்வாதிகள், வசதிபடைத்தவர்கள் கலெக்டர் ஊரில் இல்லாத போது,   ஜேசிபி வாகனங்களை பயன்படுத்தி தங்களது தேவைகளை
பூர்த்தி செய்து கொள்கின்றனர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க கலெக்டருடன் துணை நிற்க வேண்டிய பல அதிகாரிகளும் அவர்களுக்கு துணை போகின்றனர்  என பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புலம்பி தீர்க்கின்றனர்.Tags : JCP ,town ,
× RELATED வடலூரில் மூடிக்கிடக்கும் உழவர்...