மாவட்டத்தில் இதுவரை 119 பேர் வேட்பு மனுதாக்கல்

கோவை, டிச. 11:  கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன் தினம் துவங்கியது. முதல் நாள் 41 பேர் மனு தாக்கல் செய்தனர், நேற்று 78 பேர் மனு தாக்கல் செய்தனர் மொத்தம் இதுவரை 119 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, வரும் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் துவங்கியது. கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. மேலும், 228 கிராம ஊராட்சிகளில் 2,034 வார்டு கவுன்சிலர், 155 மாவட்ட கவுன்சிலர், 228 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி, 17 மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன் தினம் துவங்கியது. இதனிடையே நேற்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 11 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 64 பேரும் என மொத்தம் 78 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: