×

சுந்தராபுரம் பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த சுற்றுச்சுவர் இடிப்பு

கோவை,டிச.11: கோவை சுந்தராபுரம் பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த சுற்றுச்சுவரை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர்.மேட்டுப்பாளையம், நடூர் கிராமத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கோவை மாநகராட்சி பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து, கட்டிட உரிமையாளருக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஆணைகளை மாநகராட்சி அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை சுந்தராபுரம் அறிஞர் அண்ணா நகர், சர்ச் வீதியில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த தனியார் 25 அடி நீளமுள்ள சுற்றுச்சுவரை இடித்து அகற்ற வேண்டும் என கடந்த மூன்று நாட்களுக்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு ஆணையை ஒட்டி சென்றனர். ஆனால் சுற்றுச்சுவர் உரிமையாளரிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் நேற்று அப்பகுதிக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் சுற்றுச்சுவரை முற்றிலுமாக இடித்து அகற்றினர்.

Tags : Demolition ,
× RELATED பெண்கள், குழந்தைகள் திடீர் போராட்டம்...