×

கோவை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்

கோவை, டிச.11:  கோவை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் தனபால் கூறியதாவது:- கோவை மாநகராட்சியின் பிரதான சாலைகளான அவினாசி ரோடு, திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு, சக்தி ரோடு, மேட்டுப்பாளையம் சாலைகளில் உள்ள சிக்னல்களுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையங்களை உடனடியாக மாற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் அதிகமாக உள்ள இடங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கிறது. இந்த பகுதிகளில் மக்கள் பாதையை கடக்க நடைபாைத மேம்பாலம் அமைக்க வேண்டும். குறிப்பாக, சித்ரா, ஹோப்காலேஜ், பீளமேடு, நவ இந்தியா, லட்சுமி மில்ஸ், உப்பிலிபாளையம், சரவணம்பட்டி, கணபதி, துடியலூர் போன்ற இடங்களில் நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தனபால் கூறினார்.

Tags : Coimbatore Municipality ,
× RELATED விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்