×

உள்ளாட்சி 2ம் கட்ட தேர்தல் ஊராட்சி ஒன்றியங்கள் விபரம் வெளியீடு

ஈரோடு, டிச.11: ஈரோடு மாவட்டத்தில் 2ம் கட்டத்தில் எந்தெந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கதிரவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டங்களாக ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஊராட்சி ஒன்றியங்கள் விபரம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக வரும் 30ம் தேதி அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, பவானிசாகர், சென்னிமலை, பெருந்துறை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமப்பகுதி உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.இதில் 1,203 ஊராட்சி கவுன்சிலர், 130 ஊராட்சி தலைவர் 104 ஒன்றிய கவுன்சிலர், 11 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. வாக்குபதிவானது காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறி உள்ளார்.

Tags : Panchayat Unions ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி...