அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்

ஈரோடு, டிச. 11: ஈரோடு மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று (11ம் தேதி) முதல் அரையாண்டு தேர்வு துவங்குகிறது.  இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு இன்று (11ம் தேதி) துவங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் 2க்கு இன்று காலையும், பிளஸ் 1க்கு மதியமும் தமிழ் பாட தேர்வு நடக்கிறது.  12ம் தேதி காலை பிளஸ் 2க்கும், மதியம் பிளஸ் 1க்கும் ஆங்கில பாட தேர்வு நடக்கிறது. 13ம் தேதி எஸ்எஸ்எல்சி மற்றும் 8ம் வகுப்புக்கு காலையில் தமிழ் தேர்வும், மதியம் 9ம் வகுப்புக்கு ஆங்கில தேர்வும், 7ம் வகுப்புக்கு தமிழ் தேர்வும் நடக்கிறது.

13ம் தேதி காலை பிளஸ் 2க்கு கணிதம், வணிகவியல், மதியம் பிளஸ் 1க்கு இயற்பியல், பொருளியல் தேர்வும், 16ம் தேதி காலை பிளஸ் 2க்கு இயற்பியல், பொருளியல், எஸ்எஸ்எல்சி மற்றும் 8ம் வகுப்புக்கு ஆங்கில தேர்வும், மதியம் பிளஸ் 1க்கு கணிதம், வணிகவியல், 9ம் வகுப்புக்கு தமிழ், 7ம் வகுப்புக்கு ஆங்கில பாட தேர்வு நடக்கிறது.18ம் தேதி காலை பிளஸ் 2க்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், எஸ்.எஸ்.எல்.சி.க்கு கணிதம், 8ம் வகுப்புக்கு சமூக அறிவியல் தேர்வும், மதியம் பிளஸ் 1க்கு வேதியியல், கணக்கு பதிவியல், 9ம் வகுப்புக்கு கணித பாட தேர்வும் நடக்கிறது. 19ம் தேதி மதியம் 7ம் வகுப்புக்கு கணித தேர்வு நடக்கிறது. 20ம் தேதி காலை பிளஸ் 2க்கு வேதியியல், கணக்கு பதிவியல், எஸ்.எஸ்.எல்.சி மற்றும் 8ம் வகுப்புக்கு அறிவியல், மதியம் பிளஸ் 1க்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், 9ம் வகுப்புக்கு சமூக அறிவியல், 7ம் வகுப்புக்கு அறிவியல் தேர்வு நடக்கிறது. 23ம் தேதி காலை பிளஸ் 2க்கு வரலாறு, விலங்கியல், எஸ்.எஸ்.எல்.சி.க்கு சமூக அறிவியல், 8ம் வகுப்புக்கு கணிதம், மதியம் பிளஸ் 1க்கு வரலாறு, விலங்கியல், 9ம் வகுப்புக்கு அறிவியல், 7ம் வகுப்புக்கு சமூகவியல் தேர்வு நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>