×

கஞ்சா விற்றவர் கைது

ஈரோடு, டிச.11: ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் கே.என்.பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று பங்களாபுதூர் போலீசார் கே.என்.பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு மர்ம நபரை பிடித்து சோதனை செய்தனர். இதில், அந்த நபர் பெரிய கொடிவேரியை சேர்ந்த அய்யப்பன் (24) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அய்யப்பனை போலீசார் கைது செய்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது