பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

அந்தியூர், டிச.11: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, பழங்குடியின மக்கள் மற்றும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். பின்னர், பர்கூர் மலைப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் புகார்களை பர்கூர் காவல்துறையினர் பதிவு செய்ய மறுக்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பர்கூரில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பூர்வீக பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு  செய்யப்படும்போது, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை. மேலும், மலைப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு அரசின் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. அரசின் சலுகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து முற்றுகை கைவிடப்பட்டது.

Related Stories:

>