×

குடியுரிமை திருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டம்

ஈரோடு, டிச. 11: ஈரோட்டில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 34 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மக்களவையில் கடும் எதிர்ப்பு பின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஈரோட்டில் நேற்று மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. தடையை மீறி நடந்த இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகம்மது ஹசன் அலி, மாவட்ட பொதுச்செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகில் நடந்த இப் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 34 பேரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.


Tags :
× RELATED குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை...