ரேஷன் கடை ஊழியரை இடமாற்றம் செய்ய கோரிக்கை

மொடக்குறிச்சி, டிச.11: அத்தியவசியப் பொருட்களை முறையாக வழங்காத ரேஷன் கடை ஊழியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடுமுடி ஒன்றியம் கிளாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட சாணார்பாளையத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் கிளாம்பாடி, சாணார்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.இந் நிலையில், அங்கு பணிபுரியும் லோகநாதன் என்பவர் ரேஷன் பொருட்களை முறையாக வழங்குவதில்லை. எடை குறைவாகவும், அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு இருந்தாலும் இல்லை எனக் கூறி அனுப்பி விடுவதாக கூறி அப்பகுதி மக்கள், கூட்டுறவு சங்க தலைவர் தேவராஜிடம் புகார் அளித்துள்ளனர்.அதில், ரேஷன் கடை ஊழியர் லோகநாதனை இடமாற்றம் செய்து விட்டு புதிய ஊழியரை நியமித்து பொதுமக்களுக்கு முறையாக ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>