×

பாஜக தீர்மானம் பூம்புகாரில் தீக்குளித்த பெண் சாவு

சீர்காழி, டிச.11:பூம்புகாரில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.சீர்காழி அருகே பூம்புகார் சுனாமி நகரில் வசிப்பவர் பிரவீன்(27). மீனவர் இவரது மனைவி மோனிஷா (21). இவர் கடந்த 9ம் தேதி இரவு தனக்கு தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தோர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மோனிஷா பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து பூம்புகார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Poompuhar ,fire ,
× RELATED ஓட்டலில் தங்கி இருந்த வெளிநாட்டு பெண் பலி