×

மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்

மயிலாடுதுறை டிச.11: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரியை அமைக்கக் கோரி மயிலாடுதுறை நகர பாஜகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.நகர தலைவர் மேடிக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மோடி அரசு பின்தங்கிய மாவட்டங்களுக்காக சிறப்புத்திட்டத்தில் மருத்துவக் கல்லூரியை ஒதுக்கியுள்ளது.நாகை மாவட்டம் பெயரில் மருத்துவக் கல்லூரியை வாங்கி நாகப்பட்டினத்தில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசு எந்த நோக்கத்திற்காக மருத்துவக்கல்லூரியை அனுமதித்ததோ அந்த நோக்கம் நிறைவேற விடாமல் நாகப்பட்டினத்தில் அமைக்க இருப்பதை தவிர்த்து மயிலாடுதுறையில் அமைக்க இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

மயிலாடுதுறை கோட்டத்தில் 10 லட்சம் மக்கள் தொகை 500க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைக்கொண்ட பகுதி. இங்கே உள்ளவர்கள் மருத்துவ சேவை பெறவேண்டுமானால் குறைந்தபட்சம் 40 கி.மீ தூரம் அல்லது 80 கி.மீ தூரம் செல்லும் நிலைமைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.நாகப்பட்டினத்தில் இருப்பவர்கள் 20 கி.மீ மேற்கே உள்ள திருவாரூரில்உள்ள மருத்துவக்கல்லூரிக்குச் செல்லமுடியும், அல்லது வடக்குப் பகுதியில் 15 கி.மீ தூரத்தில் உள்ள காரைக்கால் மருத்துவக்கல்லூரிக்குச் செல்லமுடியும் தற்பொழுது இந்த கல்லூரி அங்கே அமைவதை விட மருத்துவக்கல்லூரி இல்லாத 200 படுக்கைகளுக்குமேல் அரசு மருத்துவமனையைக் கொண்ட மயிலாடுதுறைக்கே மருத்துவக்கல்லூரியை அமைக்கவேண்டும் என்றும் இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Tags : Medical College ,Mayiladuthurai ,
× RELATED தமிழகத்தில் 50வது மருத்துவ கல்லூரி :...