×

மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு மேலும் இடம் கேட்டாலும் தரத்தயார் அரபிக் கல்லூரி நிர்வாகம் கலெக்டரிடம் ஒப்புதல் கடிதம்

மயிலாடுதுறை டிச.11: நாகை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய அரசு சிறப்புத்திட்டத்தின்கீழ் 60 சதவீதம் நிதியை ஒதுக்கி அறிவித்துள்ளது. மீதம் 40 சதவீதம் தமிழக அரசு அளிக்கும். அதற்கான இடத்தை தேர்வு செய்தபோது நாகப்பட்டினம் அருகே உள்ள ஒரத்தூரில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை தேர்வு செய்து மாவட்ட கலெக்டர் மூலம் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என தமிழக அரசு அறிவிக்கும்போது நாகைக்கு பெற்றுக் கொள்ளட்டும் என்றும் மத்திய அரசு பின்தங்கிய மாவட்டத்திற்கு என்று ஒதுக்கியதை நாகை மாவட்டத்திலேயே அதிக மக்கள்தொகை கொண்டதும், மிகவும் பின்தங்கிய மக்கள் வசிக்கும் இடமாக மயிலாடுதுறை திகழ்வதால் மயிலாடுதுறையில் உள்ள நீடூர் பகுதியில் அரபிக்கல்லூரி நிர்வாகத்தினர் இலவசமாக 22 ஏக்கர் வழங்கியதுடன் முன் நுழைவுக்கான அனுமதியும் அளித்த இடத்திலேயே மருத்துவக்கல்லூரியை அமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.

நாகைக்கு அருகே 20 கி.மீ தொலைவில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் உள்ளதால் மக்கள் பயன்பெறுகின்றனர். மாவட்டத்திலேயே அதிக மக்கள்தொகை கொண்ட கோட்டம் மயிலாடுதுறை, மருத்துவக் கல்லூரிக்கு செல்லவேண்டும் என்றால் 40கி.மீ முதல் 85 கி.மீ தூரம்வரை செல்லும் நிலை உள்ளது. அதை தவிர்க்க மயிலாடுதுறைக்கு மருத்துவக்கல்லூரியை வழங்கவேண்டும். நாகப்பட்டினத்தில் பார்த்த இடத்திற்கு மாற்றாக வேறு இடம் அளித்தால்தான் அரசு சட்டப்படி மருத்துகவுன்சில் ஒத்துக்கொள்ளும், மாவட்டத்தலைநகரில்தான் மருத்துவக்கல்லூரி என்ற பேச்சிற்கே இடமில்லாமல், 200 படுக்கை வசதிகொண்ட மருத்துவமனை உள்ள எந்த இடத்திலும் அமைக்கலாம் என்று தெளிவாகக் கூறியுள்ளது.

மேய்க்கால் புறம்போக்கு இடத்திற்கு மாற்றாக மேலவாய்மேடு பகுதியில் 22 ஏக்கர் நிலம் தேடி மாவட்ட நிர்வாகத்தினர் அலைந்து திரியும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மக்களுக்கு ஏன் மருத்துவக்கல்லூரி வேண்டும் என்ற பல்வேறு பலமான காரணங்களை சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் குத்தாலம் எம்எல்ஏ கல்யாணம் வழக்கு தொடர்ந்தார். வரும் 16ம் தேதி மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே நேற்றுமுன்தினம் மயிலாடுதுறை நீடூர் அரபிக்கல்லூரி நிர்வாகத்தின் தலைவர் நஜ்முதீன், செயல் தலைவர் அப்துல்மாலிக், துணைத் தலைவர் வதூத், பொதுச் செயலாளர் எஸ்கொயர் சாதிக், பொருளாளர் எம்.எம்.இக்பால் மற்றும் பலர் நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து, மயிலாடுதுறை நீடூர் பகுதியில் 22 ஏக்கர் நிலத்தை அளித்துள்ளோம், விஏஓவும் வந்து இடத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர். நாங்கள் வழங்க ஒப்புதல் அளித்த நிலத்திற்கும்மேல் நிலம் தேவைப்படின் அதையும் வழங்க தயாராக இருக்கிறோம் என்று அனைவரும் கையொப்பமிட்டு மாவட்ட ஆட்சியரிடம் அளித்து வந்தனர்.மருத்துவக்கல்லூரி மயிலாடுதுறையில் அமைக்க அரசு எவ்வளவு இடம் கேட்டாலும் நாங்கள் தருவதற்குத் தயார் என்று அரபிக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளதை மயிலாடுதுறை மக்கள் வரவேற்றுள்ளனர்.

Tags : construction ,Mayiladuthurai ,
× RELATED நவீன் பில்டர்ஸ் கட்டுமான நிறுவனம்...