×

வழக்கு நிலுவையால் அச்சம் மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு அரசுக்கு அறிக்கை அனுப்பி விரைவில் சீரமைக்க நடவடிக்கை

மயிலாடுதுறை, டிச.11: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததால் தற்பொழுது மயிலாடுதுறை நகரமே பாதாள சாக்கடைக் கழிவுநீர் நாற்றத்தால் தத்தளிக்கிறது. அடிக்கடி முக்கிய குழாய்களில் உடைப்பு ஏற்படுவதால் சாலையில் பள்ளம் ஏற்படும் போதெல்லாம் போக்குவரத்து திருப்பி விடப்படுவது வாடிக்கையாகிவிட்டது. தற்பொழுது மழை விட்டு விட்டு பெய்ததால் மயிலாடுதுறை நகரமே கூவத்தின் தாக்கத்திற்கு ஆளானது மாறிவிட்டது. அத்துடன் 50 கி.மீ தூரத்திற்கான நகர சாலைகள் படுமோசமாகிவிட்டது. தரங்கை சாலையில் பாதாள சாக்கடை உடைந்த குழாய் சரிசெய்யப்படவில்லை. இதனால் தெருக்களில் திருப்பிவிடப்பட்ட போக்குவரத்தால் மயிலாடுதுறை மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆய்வுமேற்கொள்ள தமிழக அரசின் நகராட்சி நிர்வாக கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், மண்டல பொறியாளர் பார்த்திபன், மண்டல இயக்குனர் உமாமகேஸ்வரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய இணை தலைமை பொறியாளர் சேட்டு, மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மயிலாடுதுறை பாதாள சாக்கடைத் திட்டம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர். 8வது கழிவுநீரேற்று நிலையத்தில் 120 குதிரை திறன்கொண்ட மோட்டார் பொருத்தாமலேயே கடந்த 10 ஆண்டுகளாக இயங்கியதை கண்டு ஆச்சர்யப்பட்டனர். மேலும் அனைத்து கழிவுநீரேற்று நிலையங்களையும் ஆய்வு செய்ததுடன், படுமோசமான சாலைகளை ஆய்வு செய்தனர். விரைவில் இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க இருப்பதாகவும் பாதாள சாக்கடை மற்றும் சாலைப்பணிக்கான தேவையான நிதி வழங்க பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது நகர செயலாளர் விஜிகே செந்தில் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags : inspections ,Inspector ,Mayiladuthurai ,Government ,sewer workshop ,
× RELATED புதுக்கோட்டையில் கொரோனா அச்சத்தால்...