×

உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை சீர்காழி ஒன்றிய பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்கு ஆர்வமில்லை

சீர்காழி, டிச.11: சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய 9 தேதி முதல் மனுக்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.சீர்காழி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 3, 4 ஆகிய இரண்டு வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு இரண்டாவது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதேபோல் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு இரண்டாவது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதேபோல் 37 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் இரண்டாவது நாளாக மொத்தம் மூன்று பேர் மட்டும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல் கிராம ஊராட்சி வார்டுகள் 309 உள்ளன. இந்த வார்டு உறுப்பினர் பதவிக்கு இரண்டாவது நாளாக மொத்தம் 46 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளன. மனு தாக்கல் செய்ய காலை 10 முதல் மாலை 5 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் அதிகளவில் வேட்புமனு தாக்கல் செய்ய அதிகளவில் யாரும் முன்வர வில்லை. பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தை நாடி உள்ளதால் தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற அச்சம் நிலவி வரும் நிலையிலும் இன்று நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவதாலும் வேட்புமனு தாக்கல் செய்ய பலரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : WARNING OWNERS ,elections ,Union Territory ,
× RELATED போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 37...