×

ராஜ்யபுரஷ்கார் விழாவில் பேச்சு போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 7 மாடுகள் பிடித்து அகற்றம்

சீர்காழி, டிச.11:சீர்காழி நகராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 7 மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தப்பட்டது.சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் அதிகளவில் சுற்றி திரிந்து வந்ததால் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வந்தன. சில சமயங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வந்தன. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் பொறுப்பு வசந்தன் சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் பெரும்பாலான மாடுகள் வளர்ப்போர் மாடுகளை வீடுகளில் வைத்து பராமரிக்காமல் சாலைகளில் திரிய விட்டு வந்தனர்.

இந்த நிலையில் நகராட்சி பொறுப்பு ஆணையர் வசந்தன் உத்தரவின்பேரில் துப்புரவு அலுவலர் நாட்ராயன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீரப்பன், கலியபெருமாள், துப்புரவு ஒப்பந்தகாரர் அலெக்ஸ் ஆகியோர் துப்புரவு பணியாளர்களை கொண்டு சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 7 மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் அடைத்து வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து பின்பு மாடுகள் விடுவிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : festival ,Rajyapuraskar ,
× RELATED மிசோரமில் ஊருக்குள் புகுந்து 10 மாடுகளை கொன்ற ஓநாய்கள்