×

சீர்காழி நகராட்சி பகுதியில் சாரண, சாரணிய ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்கி இந்திய குடிமகன்களாக மாற்றுகின்றனர்

நாகை, டிச.11:சாரண, சாரணிய ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்கி இந்திய குடிமகன்களாக மாற்றுகின்றனர் என ராஜ்ய புரஷ்கார் விழாவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் 2018ம் ஆண்டிற்கு ராஜ்யபுரஷ்கார் விருது பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நாகை அமிர்தாவித்யாலா பள்ளியில் நடந்தது.சாரண, சாரணியர் இயக்க மாவட்ட செயலாளர் ராமநாதன் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்து பேசியதாவது: சாரண, சாரணியர் இயக்கம் ஒழுக்கம், கட்டுப்பாடு நிறைந்தது ஆகும். இந்த இயக்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்கி எதிர்கால இந்தியாவிற்கு சிறந்த குடிமகன்களாக மாற்றி தருகின்றனர். இதனால் சாரண, சாரணியர் இயக்கத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் எந்த நேரமும் சேவை மனபான்மையுடன் இருக்கின்றனர்.

மேலும் பள்ளிகளில் ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை இந்த மாணவர்கள் தான் செய்து வருகின்றனர் என்றார். நாகை மாவட்டத்தில் 19 பள்ளிகளைச் சேர்ந்த 142 சாரண, சாரணியர் மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் சான்றிதழ் வழங்கினார். திருத்திய சோமன் பயிற்சி பெற்ற 31 பள்ளிகளைச் சேர்ந்த 327 மாணவ, மாணவிகளுக்கு நாகை மாவட்ட கல்வி அலுவலர் உஷாசாந்தாஜாய் சான்றிதழ் வழங்கினார்.கடற்கரை தூய்மை பணி செய்த 300 மாணவ, மாணவிகளுக்கு அமிர்தா வித்யாலயம் பள்ளி முதல்வர் ஜெயகணேஷ் வழங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் சங்கர், தியாகராஜன், ராஜேந்திரன், சாந்தினி, தனலட்சுமி ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்கினர்.

Tags : municipality ,teachers ,Sirkazhi ,citizens ,Indian ,
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...