×

நாகை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல்

கீழ்வேளூர், டிச.11:நாகை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுபினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து 9ம் தேதி முதல் வேட்புமனு பெறப்பட்டு வருகிறது. தற்போதைய உள்ளாட்சி தேர்தலில் நாகை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 27ம் தேதி கீழ்வேளூர், நாகை, திருமருகல், கொள்ளிடம், செம்பனார்கோயில், சீர்காழி ஆகிய 6 ஒன்றியங்களிலும், 30ம் தேதி கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம், மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

Tags : elections ,district ,Nagai ,
× RELATED 18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய...