வேலூர் புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு ‘சீல்’

வேலூர், டிச.11: வேலூர் புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். வேலூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் மாநகராட்சிக்கு சொந்தமாக 1500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மாதந்தோறும் 1 முதல் 5ம் தேதி வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகையை உடனடியாக வசூலிக்குமாறு மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட புதிய பஸ் நிலையத்தில் உள்ள 24 கடைகளில் நிலுவை வாடகையை வசூலிக்கும் பணியில் மண்டல உதவி ஆணையர் பிரபுகுமார் ஜோசப் தலைமையில் ஆர்ஐ தனசேகரன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது ₹20 லட்சம் வரை வாடகை ெசலுத்தாத 5 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அதைத்தொடர்ந்து மற்ற கடைகளில் நிலுவையில் தொகையான ₹5 லட்சம் வசூலித்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 2மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகையை உடனடியாக செலுத்தாவிட்டால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும்’ என்றனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பூட்டி சீல் வைத்தனர்.

Related Stories: