விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க மெடல்

வேலூர், டிச.11: வேலூர் தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் அலுவலகத்தில் 20 ஆண்டுகள் விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க மெடல் விருது வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சிறப்பு நிலை டிரைவர் நடராஜன், பணிபுரிந்து 20 ஆண்டுகள் விபத்தின்றி பணி முடித்ததால் அவருக்கு 2017-18ம் நிதியாண்டிற்கான தங்க மெடல் விருது வழங்கப்பட்டது.

Tags : Gold Medal ,accident ,
× RELATED மல்யுத்த போட்டியில் நாமக்கல் வீரர் தங்கம் வென்று சாதனை