கார்த்திகை தீபத்தையொட்டி மகாதேவ மலையில் தீபம் ஏற்றம்

குடியாத்தம், டிச.11: குடியாத்தம் அடுத்த மகாதேவ மலையில் கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு தீப திருநாளான நேற்று, மாலை 6 மணிக்கு வாண வேடிக்கையுடன் மலை உச்சியில் நெய் தீபம் ஏற்றப்பட்டது. இதனை, மகாதேவ சித்தர் தீபத்தை ஏற்றி வைத்தார். முன்னதாக மகாதேவ மலை கோயிலில் உள்ள விநாயகர், முருகர், சிவலிங்கம், அம்மன் ஆகியோருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், சென்னை போக்குவரத்து விசாரணை பிரிவு உதவி ஆணையாளர் பிரகாஷ்பாபு உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கு குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>