×

தீப மலையில் மகா தீபம் ஏற்றம் மலையேற 2,500 பேருக்கு மட்டும் அனுமதி

திருவண்ணாமலை, டிச.11: திருவண்ணாமலையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற தீபத்திருவிழாவில், மகா தீபம் ஏற்றும் நாளன்று மலைக்கு சென்று பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்துவது வழக்கம். மேலும், தீப தரிசனத்தை மலையில் இருந்து தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கு செல்வதை விரும்புகின்றனர். ஆனால், மலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மலைமீது பக்தர்கள் செல்ல கட்டுப்பாடு விதித்தது மாவட்ட நிர்வாகம். மேலும், ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை அளித்து, முன் அனுமதி அட்டை பெற்ற நபர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதித்தனர். அதன்படி, திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 6 மணி முதல் 11 மணி வரை மலைேயற அனுமதி அட்டை வழங்கப்பட்டது.

அதன்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி, 2,500 பக்தர்களுக்கு அனுமதி அட்டை வழங்கியதாக, செய்யாறு ஆர்டிஓ விமலா தெரிவித்தார். அனுமதி அட்டை பெற்ற பக்தர்கள், பே கோபுர வீதியில் இருந்து மலையேறும் பாைத வழியாக அனுமதிக்கப்பட்டனர். காணிக்கை நெய் மட்டும் கொண்டு செல்ல அனுமதித்தனர். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல தடையும் விதித்து, பறிமுதல் செய்தனர். மேலும், மலையேறும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உடல் நலன் பாதிக்கப்பட்டோர், முதியவர்கள் மலையேற வேண்டாம் என அறிவுறுத்தினர். மேலும், மலையேற அனுமதி அட்டை வழங்கிய இடத்தில், தன்னார்வ அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு விதைப்பந்து வழங்கப்பட்டது. மலையேறும்போது விதைப் பந்து தூவினால், மலையின் பசுமை பாதுகாக்கப்படும் என வலியுறுத்தினர்.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...