×

தீபத்திருவிழாவையொட்டி நடைபெற்ற பாரம்பரிய குதிரை, மாட்டு சந்தையை காண குவிந்த பொதுமக்கள்

திருவண்ணாமலை, டிச.11: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நடைபெற்று வரும் பாரம்பரிய குதிரை சந்தையினை காண கிரிவல பக்தர்களும், பொதுமக்களும் குவிந்தனர். அப்போது குதிரைகள் அருகில் நின்று பொதுமக்களும், சிறுவர்களும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவையொட்டி கிரிவலப்பாதையில் உள்ள சந்தை ேமடு பகுதியில் பாரம்பரிய குதிரை மற்றும் மாட்டு சந்தை ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கடந்த 7ம் தேதி பாரம்பரிய குதிரை மற்றும் மாட்டு சந்தை தொடங்கியது. இதில் மயிலாடுதுறை, சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக ஏராளமான குதிரைகள் மற்றும் மாடுகள் கொண்டு வரப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீப விழா நேற்று நடந்தது. மகா தீபத்தையொட்டி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அப்போது, கிரிவலப்பாதையில் நடைபெற்று வரும் பாரம்பரிய குதிரை மற்றும் மாட்டு சந்தைகளை பொதுமக்களும், பக்தர்களும் சென்று பார்வையிட்டனர். அப்போது, குதிரைகளுடன் பொதுமக்களும், சிறுவர்களும் அருகில் நின்றும், குதிரை மீது அமர்ந்தும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நடைபெற்று வரும் பாரம்பரிய குதிரை சந்தையை காண குவிந்த பொதுமக்கள்.

Tags : crowds ,festival ,
× RELATED பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா...