×

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம்

திருவண்ணாமலை, டிச.11: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, இன்று முதல் 3 நாட்களுக்கு ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. விழாவின் 10ம் நாளான நேற்று, மகாதீபத்துடன் 10 நாட்கள் உற்சவம் நிறைவடைந்தது. அதையொட்டி, கடந்த 10 நாட்களாக தினமும் மாடவீதியில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சி, சமய சொற்பொழிவு என திருவண்ணாமலை நகரமே விழாக்கோலமாக காட்சியளித்தது. மகா தீபத்தை தொடர்ந்து பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்திருப்பதால், திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில், தீபத்திருவிழாவின் நிறைவாக இன்று முதல் மூன்று நாட்கள் ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. அதன்படி, முதல் நாளான இன்று இரவு 9 மணியளவில் ஐயங்குளத்தில் அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் தெப்பலில் பவனி வந்து அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, நாளை (12ம் தேதி) இரவு 9 மணி அளவில், பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், 13ம் தேதி இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறும்.

Tags : festival ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...