கலசபாக்கம் அருகே 4,560 அடி உயர பர்வத மலையில் மகா தீபம் ஏற்றினர்

கலசபாக்கம், டிச.11: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கலசபாக்கம் அருகே பர்வத மலையில் மகா தீபம் ஏற்றினர். கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பர்வதமலையில் உள்ள மல்லிகா அர்ஜூனேஸ்வரர் பாலாம்பிகை கோயிலில் நேற்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், மகா தீபம் ஏற்றுவதற்காக, ஏராளமான பக்தர்கள் நெய் ஏந்தி, அரோகரா கோஷத்துடன் மலை மீது ஏறினர். சுமார் 700 அடி உயரத்தில் செங்குத்தான கடப்பாரை படி மீது ஏறும்போது பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியது விண்ணதிர செய்தது. தொடர்ந்து, மாலை 6 மணியளவில் 4,560 அடி உயர பர்வத மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். மகா தீபத்தையொட்டி கலசபாக்கம், கடலாடி, தென்மகாதேவ மங்கலம், கோயில்மாதி மங்கலம், அருணகிரி மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தீபத்திருவிழாவையொட்டி, பர்வதமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்காததால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகினர். இனி வரும் காலங்களிலாவது விசேஷ தினங்களில் பர்வதமலை ெசல்வதற்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல், எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்பட்டது. ேமலும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. பின்னர், உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. கலசபாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : mountain pass ,Kalasakkam ,
× RELATED திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்