கார்த்திகை தீபத்திருவிழாவில் பொதுமக்களுக்கு திமுகவினர் அன்னதானம் எ.வ.வேலு எம்எல்ஏ வழங்கினார்

திருவண்ணாமலை, டிச.11: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு வந்த பொதுமக்களுக்கு எ.வ.வேலு எம்எல்ஏ மற்றும் திமுகவினர் அன்னதானம் வழங்கினர். திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வந்த பொதுமக்களுக்கு திருமஞ்சன கோபுர தெருவில் உள்ள தூய்மை அருணை அலுவலகம் அருகே திமுக சார்பில் அன்னதானம் வழங்கினர். சி.என்.அண்ணாதுரை எம்பி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், எம்எல்ஏ மு.பெ.கிரி, மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மருத்துவர் எ.வ.வே.கம்பன முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன் வரவேற்றார். முன்னாள் அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு எம்எல்ஏ, பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.செல்வம், மாவட்ட அமைப்பாளர் டிவிஎம் நேரு, மாவட்ட பிரதிநிதிகள் குட்டி புகழேந்தி, இல.குணசேகரன், ஒன்றிய செயலாளர் த.ரமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து 9 மணி நேரம் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : AVM ,public ,festival ,DMK ,Karthik Diwali ,
× RELATED பொதுமக்கள் இன்று மனு அளிக்கலாம்