×

துணிக்கடை அதிபர் வீட்டில் ₹1.8 லட்சம், வைர நகை திருடிய வேலைக்கார பெண் பிடிபட்டார்

சென்னை, டிச.11: துணிக்கடை அதிபர் வீட்டில் ரூ.1.8 லட்சம் மற்றும் 1,100 அமெரிக்கா டாலர், ைவர நகைகள் திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் ைகது செய்தனர். சென்னை ஆர்.ஏ.புரம் கேசவ பெருமாள்புரம், சென்ட்ரல் அவென்யூவை சேர்ந்தவர் ரவீந்திரன் (64), தொழிலதிபரான இவர், ஆழ்வார்பேட்டையில் துணிக்கடை மற்றும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.  இவர், கடந்த 4ம் தேதி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், எனது வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ.1.8 லட்சம் பணம், 1,100 அமெரிக்க டாலர் மற்றும் 2 வைர கம்மல், 1 வைர டாலர் மாயமாகி உள்ளது. கதவுகள் எதுவும் உடைக்கப்படாமல் கொள்ளை நடந்துள்ளது. எனவே வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்கள் மீது சந்தேகம் உள்ளது என கூறியிருந்தார்.

அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து ரவீந்திரன் வீட்டில் வேலை செய்யும் 3 வேலைக்கார பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சீதா என்ற வேலைக்கார பெண் கைவரிசை காட்டியது தெரியவந்தது. அதை தொடர்ந்து சீதாவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து அமெரிக்கா டாலர், ரூ.1.8 லட்சம் மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.

Tags : maid ,Chancellor ,house ,
× RELATED பணிப்பெண் வேலைக்குச் சம்பளம் ரூ.18.5 லட்சம்!