திமுக அறிவித்த வேட்பாளரை எதிர்த்து போட்டி வேட்பாளர்கள் போட்டியிடக்கூடாது

கும்மிடிப்பூண்டி, டிச. 11:  திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று கவரப்பேட்டையில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் பகலவன் தலைமை வகித்தார்.  தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் கதிரவன், டாக்டர் பரிமளம், சத்யராஜ், செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சி.எச்.சேகர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கட்சி வளர்ச்சி, உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசினர்.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட  செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு பேசுகையில், “உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை எதிர்த்து திமுகவை சேர்ந்தவர்கள் யாரும் போட்டி வேட்பாளராக போட்டியிடக்கூடாது. மீறி போட்டியிடுபவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற அனைவரும் கடுமையாக பணியாற்ற வேண்டும்” என்றார். கூட்டத்தில், ஒன்றிய, நகர பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.

Tags : candidate ,DMK ,
× RELATED தகுதியானோர் பங்கேற்க அழைப்பு...