×

நிலவேம்பு கசாயம் வினியோகம்

மாமல்லபுரம், டிச. 11: மாமல்லபுரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட ஐயப்பா சேவா சங்க தலைவர் சுப்பையா தலைமை தாங்கி பொதுமக்கள் 200 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அப்போது, சுப்பையா பேசுகையில், ‘நாம் வாழும் பகுதிகளை பொறுத்தவரை வீடுகளில் மூடாத டிரம்கள், தண்ணீர் பைப் லைன் அருகே குழிகள், மாடிகளில் வைத்திருக்கும் உபயோக மற்ற பொருட்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், வீடுகளில் சரியாக மூடாத தரை தொட்டிகள், டயர்கள், உடைந்த சிமென்ட் தொட்டிகள் ஆகியவற்றில் தேங்கும் தண்ணீரில் ஏடிஎஸ் கொசுக்கள் முட்டையிட்டு, அது நாளடைவில் புழுவாக வளர்ந்து பின்பு கொசுவாக உருவாகிறது. இந்த கொசுக்கள், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை கடித்து விட்டு, மற்றவர்களை கடிப்பதால டெங்கு பரவுகிறது. இதனால், நாம் வாழும் பகுதிகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED துண்டு பிரசுரம் வழங்கல்