×

வாலாஜாபாத் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

வாலாஜாபாத், டிச. 11: வாலாஜாபாத் பேரூராட்சியில், 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலாஜபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சியில் பஸ் நிலையம், பஜார் வீதி, மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், சாலையோர கடைகள், துணிக்கடைகள் உள்ளன. இங்கு, தமிழக அரசு தடை செய்த பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதாக பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாசுக்கு தொடர் புகார்கள் வந்தன.இதையடுத்து, செயல் அலுவலர் தலைமையில், பேரூராட்சி ஊழியர்களுடன் வாலாஜாபாத் பஸ் நிலையம், ராஜவீதி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள உணவகங்கள், பேக்கரி உள்பட பல்வேறு கடைகளில் 20 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், கடை உரிமையாளர்களுக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதித்து பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், இதுபோன்று பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது. மீறினால் சட்ட ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பேரூராட்சி நிர்வாகம் அடிக்கடி, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என வலியுறுத்தி ஆய்வு மேற்கொள்வது இப்பகுதி மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Tags : Walajabad ,
× RELATED கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டு: டிராக்டர் பறிமுதல்