×

கோவில்பட்டி மார்க்கெட்டில் வாகன நுழைவு கட்டண பட்டியல்

கோவில்பட்டி: கோவில்பட்டி  நகராட்சி தினசரி மார்க்கெட்டிற்குள் செல்லும் வாகனங்களுக்கான நுழைவு கட்டண  விலை பட்டியலை வைக்க வேண்டும் என கடை வியாபாரிகள் நகராட்சி கமிஷனரிடம்  கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி  தினசரி மார்க்கெட் வியாபாரிகள் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்  வடக்கு மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில், கடை வியாபாரி செல்லத்துரை  முன்னிலையில் நகராட்சி ஆணையாளர் ராஜாராமிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனு விவரம்; கோவில்பட்டி நகராட்சி தினசரி  மார்க்கெட்டிற்கு உள்ளே செல்லும் டாடா ஏசி, ஆட்டோ, வேன், லாரி மற்றும் கனரக  வாகனங்களுக்கு நகராட்சி நிர்ணயித்த விலைப்பட்டியல் வைக்கப்படவில்லை.  இதனால் நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வாகனங்களிடம் வசூல் செய்ய  வேண்டும்.

இதற்கான நுழைவு கட்டண விலை பட்டியலை மார்க்கெட் வாசல்  முன்பு வைக்கப்பட வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் சாலையோர  கடைகளை அகற்ற வேண்டும். மார்க்கெட்டிற்குள் டீ, காபி விற்கும்  சிறுவியாபாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.    எனவே நகராட்சி தினசரி  மார்க்கெட்டிற்குள் செல்லும் அனைத்து வாகனகளுக்கான நுழைவு கட்டணங்களுக்கான  விலை பட்டியலை மார்க்கெட் வாசல் முன் வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்று கொண்ட  நகராட்சி ஆணையாளர் ராஜாராம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags : Kovilpatti Market ,
× RELATED கோவில்பட்டி மார்க்கெட்டில் இலவச நவீன கழிப்பிட வசதி