×

நாகர்கோவில் அருகே மது குடிப்பதை கண்டித்ததால் கல்லூரி ஊழியர் தற்கொலை அதிக ேபாதையில் வட மாநில வாலிபர் பலி

நாகர்கோவில், டிச.11 : நாகர்கோவில் மேல புத்தேரி யோகீஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் யோகீஸ்வரன் (44). கல்லூரி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு மனைவி அனிதாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். சமீப காலமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதை அனிதா கண்டித்ததால், கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன் தினம் இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் படுக்கை அறைக்கு சென்ற யோகீஸ்வரன், நேற்று காலை வெகு நேரமாக வெளியே வர வில்லை. இதையடுத்து அவரது மனைவி சென்று பார்த்த போது, யோகீஸ்வரன் அங்கு தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று யோகீஸ்வரன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அனிதா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வட மாநில வாலிபர் சாவு : ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் முஷா பகாடியா (45). இவர், சுசீந்திரம் அருகே நைனாபுதூரில் உள்ள வலை கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். நேற்று முன் தினம் இவர் அதிக குடிபோதையில் தனது அறைக்கு வந்தார். நேற்று அதிகாலையில் பார்த்த போது வாயில் நுரை தள்ளிய நிலையில் முஷா பகாடியா இறந்து கிடந்தார். அதிகமாக மது அருந்தி இவர் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சுசீந்திரம்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நாளைய மின்தடை

தக்கலை  மின் விநியோக உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: ஆளூர் மின்  பாதையில் நாளை (12ம் தேதி)  மின் அழுத்த கம்பிகள் மாற்றுதல் மற்றும் புதிய  மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் மணலி, மேட்டுக்கடை,  தக்கலை, முத்தலக்குறிச்சி, கொல்லன்விளை, புலியூர்குறிச்சி, வில்லுக்குறி,  அப்பட்டுவிளை, மணக்கரை, மேல்பாறை, சித்தன்தோப்பு, மாடத்தட்டுவிளை,  குதிரைபந்திவிளை ஆகிய இடங்களுக்கும் அதனை சார்ந்த துணை கிராமங்களிலும்  காலை 8 மணி முதல் மதியம் 2 மணி மின்சாரம் வரை இருக்காது.

* நாகர்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜசேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: மீனாட்சிபுரம், தெங்கம்புதூர் துணை மின்நிலையங்களில் நாளை(12ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் நாளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டார், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சரலூர், ராமன்புதூர் சந்திப்பு, இந்துக்கல்லூரி, வேதநகர், தெங்கம்புதூர், பறக்கை, ஐஎஸ்இடி, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், புத்தன்துறை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : state ,
× RELATED மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்