×

சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வந்த 3 செங்கல் சூளைகளை மூட நோட்டீஸ் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் உத்தரவு

நாகர்கோவில், டிச.11: திருவட்டார் மற்றும் கிள்ளியூர் தாலுகா பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வந்த மூன்று செங்கல் சூளைகளை மூடுவதற்கு பத்மநாபபுரம் சப் கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் பகுதிகள், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. ஆற்றின் கரைகளில் இருந்தும், குளங்களில் இருந்தும், பட்டா நிலங்களில் இருந்தும் மண் எடுக்கப்பட்டு செங்கல் சூளைகள் செயல்படுகின்றன. குழித்துறை ஆற்றின் கரையோர பகுதிகளில் சட்ட விரோதமாக இயங்கும் செங்கல் சூளைகளை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் பத்மநாபபுரம் சப் கலெக்டர் சரண்யா அறி, திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் செங்கல் சூளைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதில் மூன்று செங்கல்சூளைகள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் சட்ட விரோதமாக இயங்குவதாக கண்டறியப்பட்ட நிலையில் அவற்றை மூடுவதற்கு சப் கலெக்டர் சரண்யா அறி நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : Padmanabapuram Sub-Collector ,
× RELATED 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும்...