×

புனேயில் செவிதிறன் நவீன சிகிச்சை மையம் நிதி திரட்ட விழிப்புணர்வு ஆட்டோ பேரணி

கன்னியாகுமரி:  இந்தியாவில்  குறிப்பிட்ட சதவீதம் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கின்றனர்.  இவர்களுக்கு 6 வயதுக்குள் அறுவை சிகிச்சை அளித்தபின் தொடர் சிகிச்சை  அவசியமாகிறது. இதற்காக குஜராத் மாநிலம் புனே அருகில் பல கோடி ரூபாய்  மதிப்பீட்டில் சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. அதற்கு பொதுமக்களின்  பங்கேற்பு இருக்கும் வகையில் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை நிதி  திரட்டும் விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடத்த சக்சம் அமைப்பு முடிவு  செய்தது. இந்த பேரணியை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் ேநற்று காலை வெள்ளிமலை விவேகானந்த ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தா  ஆசியுரை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சக்சம் தேசிய  இணைச்செயலாளர் கோவிந்தராஜ், சேவா இன்டர்நேஷனல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்  வெல்ஜிபாய், ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் முருகன், பாஜ நிர்வாகிகள் முத்துராமன்,  சுபாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணி தமிழ்நாடு, கர்நாடகா,  கோவா, மகாராஷ்டிரா வழியாக வரும் 21ம் தேதி குஜராத்தில்  நிறைவடைகிறது. இந்த  ஆட்டோ பேரணி 2,700 கி.மீ தூரத்தை  கடக்கிறது. 30 ஆட்டோக்கள் கலந்து  கொள்ளும் இந்த பேரணியில் இங்கிலாந்து,  கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து  உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 26 பெண்கள்  உட்பட 90க்கும் மேற்பட்டோர்  செல்கின்றனர்.

Tags : Awareness Auto Rally ,Deaf Modernization Center ,Pune ,
× RELATED கனிமவள கொள்ளையை தடுக்க சிசிடிவி...