தூக்குபோட்டு பிடெக் பட்டதாரி வாலிபர் தற்கொலை

புதுச்சேரி:  சேதராப்பட்டில் திருமண வரன் கைகூடாததால் மனமுடைந்த பிடெக் பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். புதுவை, சேதராப்பட்டு அடுத்த முத்தமிழ் நகரில் வசிப்பவர் அந்தோணி ஜோசப் (52). இவரது மகன் ஜான்சன் அந்தோணி (26). பிடெக் முடித்த இவர் தனது தந்தையுடன் சேர்ந்து கிரில் தயாரிப்பு பணியை மேற்கொண்டு வந்துள்ளார். கடந்தாண்டு இந்த பணியில் ஜான்சன் ஈடுபட்டபோது அவரது கையில் 2 விரல்கள் துண்டாகி உள்ளது.

Advertising
Advertising

தற்போது அவருக்கு திருமண ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்ட நிலையில் ஜான்சனுக்கு கையில் விரல் இல்லாததால் வரன் எதுவும் கைகூடாமல் சென்றதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர், இதுபற்றி தனது நண்பர்களிடம் வேதனையுடன் தெரிவித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ள முதல் மாடியில் தனியாக படுத்திருந்த ஜான்சன், அங்குள்ள மின்விசிறியில் வயரால் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து சேதராப்பட்டு எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: