திருக்கனூர் அருகே மணல் கடத்திய வாலிபர் கைது

திருக்கனூர்:  திருக்கனூர் அருகே மணலிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் திருட்டுத் தனமாக மணல் அள்ளப்படுவதாக திருக்கனூர்  காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர

ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Advertising
Advertising

அப்போது, வேகமாக வந்த மினி வேனை துரத்திச் சென்று கூனிச்சம்பட்டு அய்யனார் கோயில் அருகே மடக்கினர். தொடர்ந்து அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் வந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த மணலிப்பட்டை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் (31) மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Related Stories: