குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து விழுப்புரத்தில் சட்ட நகல் எரிப்பு போராட்டம்

விழுப்புரம்:  விழுப்புரத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து சட்ட நகலை எரிக்க முயன்ற, சோஷியல் டெமாக்டரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இந்திய நாட்டில் முஸ்லிம்களையும், தமிழர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.,) கட்சி சார்பில், சட்ட நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே, மாவட்ட பொதுசெயலாளர் முகமது ரஃபி தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்தனர். தலைவர் சாதிக்பாஷா, பொருளாளர் சான்பாஷா, துணை தலைவர் சாதிக், செயலாளர் சையது ஹசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதையடுத்து, சட்ட நகலை எரிக்க முயன்ற நிர்வாகிகளை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து 52 பேரை கைது செய்தனர்.

Related Stories: