×

நெய்வேலியில் தகராறை தட்டிக் கேட்ட 3 பேருக்கு கத்தி வெட்டு

நெய்வேலி: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்- 21ஐ சேர்ந்தவர் காதர்பாஷா மகன் யாசின். இவர் வட்டம்-19 மெயின் பஜார் கோல்டன் பார்க்கில் தனக்கு தெரிந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அந்த பெண்ணின் உறவினர்களான செடுத்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாரதி, மகேஷ், சசி என்ற வாலிபர்கள், யாசினிடம் ஏன் எங்களது உறவினர் பெண்ணிடம் பேசுகிறாய் என்று கூறி தகராறு செய்தனர்.
இதையடுத்து யாசின், தனது சித்தப்பா அப்துல்கரீமிடம் கூறியதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அப்துல்கரீம், தனது நண்பர்களான பிரபாகரன், பிரசாந்த் ஆகியோரை அழைத்து வந்து அங்கு யாசினிடம் தகராறு செய்த நபர்களை தட்டிக் கேட்டுள்ளனர்.

அப்போது மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அப்துல்கரீம் மற்றும் அவருடன் வந்தவர்களை கத்தியால் வெட்டி உள்ளனர். இதில் காயம் அடைந்த மூன்று பேரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் காவல் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Neyveli ,
× RELATED நெய்வேலியை சேர்ந்த செல்வமுருகன்...