இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

வடலூர்: குறிஞ்சிப்பாடி நந்தவனத் தெருவில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கவிதா தனது வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குறிஞ்சிப்பாடி போலீசார், கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் பிரச்னை காரணமாக கவிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கவிதாவின் தம்பி கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Teenager suicide ,
× RELATED இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை