கால்நடை மருத்துவமனையில் பசுந்தீவன விதைகள் வழங்கல்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே வேளானந்தல் கிராமத்திலுள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடை மற்றும் பராமரிப்பு துறை சார்பில் பசு மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பசுந்தீவன விதைகள் வழங்கப்பட்டது. உழவர் உற்பத்தியாளர் குழுத்தலைவர் அனந்தநாராயணன் தலைமை வகித்தார். வேளானந்தல் கால்நடை மருத்துவர் முருகு கலந்துகொண்டு பசு மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பசுந்தீவன விதைகள் தொகுப்பு பாக்கெட்டுகளை வழங்கினார். இதுகுறித்து கால்நடை மருத்துவர் முருகு கூறுகையில், கால்நடைகளின் பால் உற்பத்தி திறனை பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது அவசியம். கால்நடைகளின் பசுந்தீவன தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளியை போக்கி,

தீவனப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், விவசாயிகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் கால்நடை பராமரிப்புதுறையின் மூலம் தீவனப்பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கு மாவுச்சத்து, புரதச்சத்து மிக அவசியம். தமிழக அரசு பசுந்தீவன வளர்ப்பு குழு சார்பில் சோளம் விதைகள், தட்டபயிர்கள் வழங்குகிறது. இவற்றை ஊடுபயிராக விதைத்து பயன்பெறலாம் என கூறினார். இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சக்திவேல் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: