×

அருப்புக்கோட்டை நகராட்சி 11வது வார்டு பகுதியில் தூர்வாரப்படாத ஓடையால் துர்நாற்றம்


அருப்புக்கோட்டை, டிச.10: அருப்புக்கோட்ைட நகராட்சி 11வது வார்டில் குடியிருப்பு பகுதியின் நடுவே செல்லும் ஓடை தூர்வாரப்படாததால், சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. அருப்புக்கோட்டை நகராட்சி 11வது வார்டிற்கு உட்பட்டது மேலரதவீதி, கள்ளர் தெரு, பகுதிகள் உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. சலவை தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியை ஒட்டி பிரதான ஓடை உள்ளது. நகராட்சி மூலம் பல லட்சம் ரூபாய் செலவில் நவீன ஓடை கட்டப்பட்டது. ஓடையின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டது. சீரான அமைப்பில் ஓடை இல்லாததால் மழைநீர் செல்ல முடியவில்லை. ஓடையில் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் கழிவுநீரும், செப்டிக் டேங்க் கழிவுகளும் நேரடியாக விடப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுதொல்லை அதிகம் உள்ளது. எஸ்பிகே கல்லூரி சாலையில் இருந்து துவங்கும் இந்த ஓடை சொக்கலிங்கபுரம் வரை முட்செடிகள் வளர்ந்து புதர்போல் மண்டி கிடக்கிறது.

இதனால் விஷ ஐந்துகள் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் சென்று விடுகின்றன.  இதனால் ஓடையை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் ஓடையின் ஒருபுறம் அமைக்கப்பட்ட நடைபாதையில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று நடைபாதையை மறைத்து கம்பி வேலியை கோயில் நிர்வாகம் அமைத்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியவில்லை. இந்த பகுதியில் உள்ள மினிபவர் பம்ப் மின்மோட்டார் பழுதால் செயல்படாமல் உள்ளது. பலமுறை சரிசெய்ய நகராட்சியில் கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மக்கள் தண்ணீருக்காக அலையவேண்டியுள்ளது. தெருக்களில் வாறுகால் வசதி இல்லை. குறுகலான தெருக்களாக இருப்பதால் சாலைவசதியும் இல்லை.  குப்பைத்தொட்டி இல்லாததால் குப்பைகளை ரோட்டில் கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடாக உள்ளது.

இந்த சாலையில் வாக்கிங் செல்பவர்கள் குப்பை கொட்டி துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து கொண்டு தான் செல்ல வேண்டி உள்ளது.  இந்த பகுதியில் இருந்த கழிப்பறையையும் இடித்து விட்டனர்.  இதனால் இப்பகுதி மக்கள் கழிப்பறை வசதியின்றி அவதிப்படுகின்றனர்.  எனவே நகராட்சி நிர்வாகம் ஓடையை தூர்வாரி கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ராஜூ கூறியதாவது, பல லட்சம் ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட ஓடை கழிவுநீர் செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது. மா லை நே ரங்களில் வீடுகளில் இருக்க முடியவில் லை. கொ சுத்  தொ ல்லை அதிகம் உள்ளது. நடைபாதையை மறைத்து கோயில் நிர்வாகத்தினர் வேலி அமைத்துள்ளனர். இதை அகற்ற பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றார்.

Tags : Aruppukkottai Municipality ,
× RELATED அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.50...