×

சுகாதாரக்கேடு ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் குப்பைத்தொட்டி அதிகரிப்பால் சுகாதார சீர்கேடும் அதிகரிப்பு

ராஜபாளையம், டிச. 10: ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அளவுக்கதிகமாக குப்பை  தொட்டிகளை வைத்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் நகராட்சி சார்பில், நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குப்பை  தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் அதிகம் குப்பைகளை சேகரிப்பதால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை அகற்ற  நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும்,  போக்குவரத்து இடையூறாகவும் குப்பைத் தொட்டிகளை வைத்து வருகின்றனர். விழாக்காலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் விசேஷ காலங்களில் அதிகளவு குப்பைகள் சேர்வதால், ஆங்காங்கே சாலைகளில் கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர்.

மேலும் பிரதான சாலைகளில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டியும்,  பஸ் நிலையம்  மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குப்பைகளை குவித்து வைப்பதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் குப்பைகளை சேகரித்து, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : garbage dump ,Rajapalayam ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ